பட்டாசு வெடித்த போது 200 சிறுவர்கள் காயம்

தமிழகம் முழுவதும், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்ததில் காயமடைந்த 200 க்கும் மேற்பட்ட சிறுவர்களில், 50 பேர் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-11-07 12:42 GMT
* தீபாவளி பண்டிகையான நேற்று தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்த போது 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காயமடைந்தனர். சென்னையில் கண்களில் காயம் ஏற்பட்டு அரசு கண் மருத்துவமனைக்கு 52 பேர் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அவர்களில் 17 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். 

* இதேபோல், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், 5 சிறுவர்கள்  சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 21 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற 25 சிறுவர்களில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர். 

* இதேபோல் பட்டாசு வெடித்தபோது காயமடைந்ததால்  வேலுார் மாவட்டத்தில் 4 பேர், தருமபுரி மாவட்டத்தி்ல 36 பேர், திருச்சி மாவட்டத்தில் 13 பேர், நெல்லை மாவட்டத்தில் 5 பேர், தூத்துக்குடியில் 3 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். காயமடைந்தவர்களில்  90 சதவீதம் பேர் சிறுவர்கள் என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்