"வரலாற்றை தவறாக எழுதி, அநீதி இழைத்தனர்" - பிரதமர் நரேந்திர மோடி

நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் பலனளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Update: 2021-02-16 08:59 GMT
நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் பலனளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

உத்தர பிரதேச மாநிலத்தில் மகாராஜா சுகல்தேவ் நினைவிடத்திற்கும், சித்துவாரா ஏரி வளர்ச்சிப் பணிக்கும் டெல்லியிலிருந்து காணொலி மூலம், பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.  
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 
பெருந்தொற்றை, மிக சிறப்பாக கையாண்டதாக, உத்தரப் பிரதேச அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.
நாட்டை பாதுகாக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு தகுதியான அங்கீகாரம் வழங்கப்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என குறிப்பிட்டார். வரலாற்றை தவறாக எழுதி இழைக்கப்பட்ட அநீதி தற்போது இந்தியாவில் சரி செய்யப்பட்டு வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் இருக்கும் அனைத்து சிறு விவசாயிகளுக்கும் புதிய வேளாண் சட்டங்கள் பலனளிக்கும் என குறிப்பிட்ட பிரதமர் நமது விவசாய நிலங்களை பாதுகாக்க அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
Tags:    

மேலும் செய்திகள்