நடுங்கிய 6 பேர் - ஒரே போன் காலில் - மாறிய தலையெழுத்து

Update: 2024-05-07 14:41 GMT

கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர், கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஈரானில் உள்ள சையிது சவுது ஜாபரி என்பவரிடம் மீன்பிடி வேலைக்காக, ஈரானுக்குச் சென்றனர். அங்கு அவர்களின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு, உரிய சம்பளம் தராமல் அவர்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, 6 பேரும் தாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகில் தப்பித்து, 14 நாட்களில் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து தமிழகம் நோக்கி வந்தனர். இதற்கிடையே டீசல் தீர்ந்ததால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, மீனவர்களில் ஒருவர் தனது செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர், மீனவ அமைப்பு மூலம் இந்திய கடலோர காவல் படையிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிந்த 6 மீனவர்களையும், இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு, கொச்சிக்கு கொண்டு வந்தனர். பின்னர், 6 பேரும், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்