ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பதவி பறிப்பு - மாநில தலைவர் பதவியையும் பறித்து காங்கிரஸ் கட்சி அதிரடி

ராஜஸ்தானில் முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் இடம் இருந்து துணை முதலமைச்சர் பதவி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறித்து அக்கட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2020-07-14 10:37 GMT
ராஜஸ்தான் மாநில காங்கிர​ஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற கூட்டத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு ஆதரவாக 102 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அவரும், அவரது ஆதரவாளர்களும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் , இன்றைய கூட்டத்தில் பங்கேற்காத சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்திற்கு 102 எம்எல்ஏக்களும் ஆதரவளித்த நிலையில், கட்சியின் மாநில தலைவர் மற்றும் துணை முதலமைச்சர் பதவியை பறித்து காங்கிரஸ் கட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது ஆதரவு அமைச்சர்கள் இருவரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக  கோவிந்த் சிங் டோட்சரா நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த திருப்பங்களால், ராஜஸ்தான் மாநில அரசிய​லில் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.  
Tags:    

மேலும் செய்திகள்