பார்த்து பார்த்து கிராஸ் செய்த நபர்... அடித்து தூக்கி வீசிய அசுர பைக் - நடுங்க விடும் காட்சி

Update: 2024-05-07 12:25 GMT

கொச்சி அருகே அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர், சைக்கிள் மற்றும் நடந்து சென்றவர் மீது மோதிய விபத்தின் காட்சி வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கேரளா மாநிலம் வல்லார்பாடம் சாலையில் அதிவேகமாக பைக்கில் சென்ற அபியை அவருடைய நண்பர்கள் பின்னால் மற்றொரு பைக்கில் வந்து வீடியோ எடுத்துள்ளனர். அப்பொழுது சாலையை சைக்கிளில் கடக்க முயன்றவர் மீது அதிவேகமாக மோதிய பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர் மீதும் மோதியது. பின் சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இளைஞர் அபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது விபத்தின் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்