அதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் : யார், யாருக்கு எந்த தொகுதி? : இன்று வெளியீடு

அதிமுக கூட்டணி தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2019-03-16 03:46 GMT
அதிமுக கூட்டணி தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, த.மா.கா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என். ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. யார், யாருக்கு எத்தனை தொகுதிகள் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வதில் கால தாமதம் நிலவி வந்தது. தற்போதைய சூழலில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு பணி முடிவடைந்து விட்டதால், சென்னையில் இன்று அதிமுக மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்