ஆயிஷா சுல்தானா மீதான தேசதுரோக வழக்கு; கைதானால் இடைக்கால ஜாமீன் தரவேண்டும்

லட்சத்தீவைச் சேர்ந்த ஆயிஷா சுல்தானா, தேசத்துரோக வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-17 20:37 GMT
லட்சத்தீவைச் சேர்ந்த ஆயிஷா சுல்தானா, தேசத்துரோக வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லட்சத்தீவைச் சேர்ந்தவரான ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், 20ம்தேதி கவராட்டி காவல்நிலையத்தில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போது, தான் கைது செய்யப்படலாம் என்பதால், கேரள உயர்நீதிமன்றத்தில் ஆயிஷா சுல்தானா முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தொலைக்காட்சி விவாதத்தின் போது தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், 20ம் தேதி ஆயிஷா சுல்தானா கவாராட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகலாம் என்றும், கைது செய்யப்பட்டால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மனுவில் தன்னையும் சேர்த்துக் கொள்ள பிரதீஷ் விஸ்வநாதன் என்பவர் கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்