ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி பேச்சு - ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு நன்றி கூறிய பிரதமர்

இந்தியாவிற்கு, ரஷ்யா வழங்கிய உதவிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்தார்.

Update: 2021-04-28 18:01 GMT
ரஷ்ய அதிபர் புதின் உடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, 
இரு நாடுகளிலும் நிலவி வரும், கொரோனா சூழல் குறித்து கலந்துரையாடினர். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் ரஷியா வழங்கி வரும் உதவி மற்றும் ஆதரவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவி​த்து கொண்டார். பின்னர், இரு தரப்பு உறவுகள், விண்வெளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ​ஹைட்ரஜன் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். ஸ்புட்னிக் வி தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிரான போரில், மனித இனத்திற்கு உதவியாக இருக்கும் என இரு தலைவர்களும் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்