"இது தான் கடைசி.." - டிரம்ப்பை கடுமையாக எச்சரித்த நீதிபதி

Update: 2024-05-07 14:21 GMT

ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற ஆபாச பட நடிக்கைக்கு

சட்ட விரோதமான முறையில் பெரும் தொகையை

அளித்ததாக, டிரம்ப் மீது குற்ற வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நியூயார்க் மன்ஹட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அமெரிக்க சட்டமுறையின் படி, டிரம்ப் குற்றவாளியா என்பதை தீர்மானிக்க ஜூரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்திரிக்கையாளர்கள்

சந்திப்பின் போது, ஜூரர்கள் மற்றும் சாட்சிகள் பற்றி

டிரம்ப் தரக்குறைவாக பேசியதற்காக, இதுவரை 10 முறை அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திங்களன்று 10ஆவது முறையாக அவருக்கு ஆயிரம் டாலர் அபராதம் விதித்த நீதிபதி ஜூவன் மெர்ச்சன், அடுத்த முறை ஜூரர்கள் மற்றும் சாட்சிகள் பற்றி தவறாக பேசினால், சிறைக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என்று டிரம்ப்பை

எச்சரித்துள்ளார். பொய் கணக்குகள் மூலம் டிரம்ப்,

தனது நிறுவனத்தில் இருந்து பெரும் தொகையை

வெளியே எடுத்தாக, அவரின் முன்னாள் ஊழியர்கள்

சாட்சியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்