டெலிகிராம் செயலி தரவிறக்கமும் அதிகரிப்பு

இந்தியாவில் சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலியை தரவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2021-01-18 02:57 GMT
இந்தியாவில் சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலியை தரவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாட்ஸ்-அப் செயலியின் தனியுரிமை கொள்கை சர்ச்சைக்கு மத்தியில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் சிக்னல் செயலியை 23 லட்சம் பேர் தரவிறக்கம் செய்து உள்ளனர். இது உலக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டதில் 30.6 சதவீதமாகும். இதே காலக்கட்டத்தில் டெலிகிராம் செயலியை 15 லட்சம் பேர் வரையில் தரவிறக்கம் செய்து உள்ளனர். இது உலக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டதில் 16 சதவீதம் ஆகும்.
Tags:    

மேலும் செய்திகள்