வரலாறு காணாத கனமழை - வெள்ளக் காடாக காட்சியளிக்கும் பெங்களூரு நகரம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்த வரலாறு காணாத கனமழை, நகரையே புரட்டிப் போட்டிருக்கிறது.

Update: 2020-10-24 15:03 GMT
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வருகிற 28ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனிடையே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை பெங்களூருவில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், நகரம் நிலைகுலைந்து போனது. 

குறிப்பாக, ராஜராஜேஸ்வரி நகர், ஆர்.ஆர்.நகர், பிரமோத் லேஅவுட், பீமான கட்டோ ஏரி உள்ளிட்ட பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் கைக்குழந்தைகளுடன் மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். சாலைகளில் நிறுத்தப்பட்ட கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மின் விநியோகமும் தடைப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை அமைச்சர் அசோக் நேரில் பார்வையிட்டார். பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.  

Tags:    

மேலும் செய்திகள்