மெல்ல மெல்ல டெல்லியில் கட்டுக்குள் வரும் கொரோனா - பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 70% பேர் குணமடைந்தனர்

டெல்லியில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 70 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

Update: 2020-07-05 10:26 GMT
இந்திய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தலைநகர் டெல்லி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதுவரை டெல்லியில் மொத்தம் 97 ஆயிரத்து 200 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 68 ஆயிரத்து 256 பேர் குணமடைந்து உள்ளனர். இது பாதிக்கப்பட்டவர்களில், 70 சதவீதமாகும். டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி திறனை பரிசோதனை செய்வதற்கான குழுக்களையும் அமைத்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்