"பண மலையில் பாஜக, பிஜு ஜனதா"மிரண்டு காங். வேட்பாளர் எடுத்த முடிவு - இடிந்து போன ராகுல், கார்கே

Update: 2024-05-05 04:31 GMT

"பண மலையில் பாஜக, பிஜு ஜனதா"

மிரண்டு காங். வேட்பாளர் எடுத்த முடிவு

ஒரே லெட்டர்..இடிந்து போன ராகுல், கார்கே

ஒடிசாவில் காங்கிரஸ் வழங்கிய சீட்டை கட்சியிடமே வேட்பாளர் திருப்பி வழங்கிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

ஒடிசாவில் மக்களவை தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் ஒன்றாக நடைபெறுகிறது. மாநிலத்தில் பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மாநில தேர்தல் வரலாற்றில் பிஜு ஜனதா தளம் காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்றியது, பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்திலிருந்து இறக்கிவிட்டுவிட்டது. தேர்தல் களத்தில் பிஜு ஜனதா தளம் - பாஜக இடையே கடும் மோதல் காணப்படுகிறது.

ஆனால் 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்ட காங்கிரஸ், இப்போது எப்படியாவது விட்டதை பிடிக்க போராடுகிறது. மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர் தேர்வில் இழுபறியை சந்தித்த காங்கிரசுக்கு.. மற்றொரு சவாலாக மக்களவை தொகுதியில் கொடுத்த சீட்டை வேண்டாம் என வேட்பாளர் ஒதுக்கிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அதுவும் ஒடிசாவில் முக்கியமான பூரி நாடாளுமன்றத் தொகுதியில் நடந்துள்ளது.

பூரி தொகுதியில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவை களம் இறக்கியிருக்கிறது. அவருக்கு எதிராக பிஜு ஜனதா தளம் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அரூப் பாட்நாயக்கை களம் இறக்கியிருக்கிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி 2014 தேர்தலில் தொகுதியில் 2 ஆவது இடம் பிடித்த சுசரிதா மொஹந்தியை வேட்பாளராக அறிவித்தது. அவரும் பிரசாரத்தை தொடங்கினார். ஆனால் திடீரென சீட் வேண்டாம் என கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்... தேர்தலில் போட்டியிட போதிய நிதியில்லை... .கட்சியிடம் கேட்ட போது கட்சியும் வழங்கவில்லை.. இந்த சூழலில் தன்னால் போட்டியிட முடியாது என கூறியிருக்கிறார் சுசரிதா மொஹந்தி... சொந்த காசை செலவு செய்ய மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் சொல்லிவிட்டதாக கூறியிருக்கும் மொஹந்தி... 10 வருடங்களுக்கு முன்பாக செய்தியாளர் பணியைவிட்டு விட்டு அரசியலுக்கு வந்தேன்.. வைத்திருந்த பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டேன்... இனியும் தன்னால் பணம் செலவு செய்ய முடியாது என கூறியிருக்கிறார்.

ஆளும் பிஜு ஜனதா தளமும், எதிர்க்கட்சியான பாஜகவும் பண மலையின் அமர்ந்திருக்கும் சூழலில் தன்னால் போட்டியிட முடியவில்லை என கூறியிருக்கும் அவர், தொகுதிக்குள் அடங்கிய ஏழு சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் பலவீனமான வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது எனவும் பலம் பொருந்திய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார். தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்றாலும் காங்கிரசுக்கான என் சேவை தொடரும் என கடிதத்தில் எழுதியிருக்கிறார் மொஹந்தி..

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவுக்கு ஓடிவிட்டார். இதனையடுத்து காங்கிரஸ் வேட்பாளர்கள் கடைசி வரையில் கட்சியில் இருப்பார்களா என்ற கேலிக்கு உள்ளாகியிருக்கிறது காங்கிரஸ்... இந்த சூழலில் கட்சி செலவுக்கு பணம் தரவில்லை என வேட்பாளர் சீட்டையை திருப்பிகொடுத்த சம்பவம் காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்