"ஆயுத காவல்படை கேன்டீன்களில் உள்நாட்டு பொருட்கள் மட்டுமே விற்பனை" - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக மாற்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2020-05-14 02:45 GMT
நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக மாற்ற, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, ஆயுதக் காவல் படையினர் கேன்டீன்களில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா, இந்த தகவலை டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஆயுத காவல்படை அங்காடியில் ஆண்டு தோறும் 28 ஆயிரம் கோடி அளவுக்கு விற்பனையாகும் நிலையில், இந்த முடிவால், 10 லட்சம் குடும்பத்தை சார்ந்த 50 லட்சம் பேர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்