போட்டித் தேர்வுக் களமாக மாறிய ரயில் நிலையம்...

அரசு அதிகாரிகளை உருவாக்கி வரும், போட்டித் தேர்வுக் களமாக மாறிய ரயில் நிலையம்.

Update: 2019-01-06 05:31 GMT
* அரசு வேலை வாய்ப்பை பெறுவதற்கு, போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள், குழுவாக அமர்ந்து படிக்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது.

* போட்டித் தேர்வுகளை எழுதச் செல்லும் பட்டதாரிகள், பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். செல்லும் வழியிலும், ரயில் நிலையங்களிலும், படிப்பதற்கான சூழல் நிலவுவதால், இந்த பயணம் வெற்றிப் பயணமாக அமைந்து விடுகிறது. 

* ரயிலில் பயணித்து தற்காலிக வேலைக்கு செல்பவர்களில் நிறைய பேர், பணி முடிந்து வீடு திரும்புவதற்கு முன்பு ரயில் நிலையத்தில் அமர்ந்து போட்டி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில், பிரபலமாகியுள்ள இந்த ரயில் நிலையம். பீகார் மாநிலத்தில் உள்ள சாசராம் (Sasaram) ரயில் நிலையத்தில் மட்டுமே, 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி எந்த விதமான சலசலப்பும் இன்றி, போட்டித் தேர்வுக்கு குழுவாக அமர்ந்து படித்து, ஆச்சரியப்பட வைத்து வருகின்றனர். 

* இவர்களுக்கு ரயில் நிலைய அதிகாரிகளும், ரயில்வே காவல் துறையினரும் உறுதுணையாக இருந்து, தேவையான பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர். பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு, அடையாள அட்டை வழங்கியும், பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்து தந்தும் வருகின்றனர். 

* இந்த ரயில் நிலையத்தில் அமர்ந்து படித்து, வேலை வாய்ப்பை பெற்றவர்கள் நன்றி மறப்பது இல்லை... என்ன செய்கிறார்கள் தெரியுமா...? இங்கு அமர்ந்து படித்து, வேலை வாய்ப்பை பெற்றவர்கள், போட்டித் தேர்வுக்கு முழு கவனம் செலுத்தி, படிப்பவர்களுக்கு, தினமும் வந்து பயிற்சி அளிக்கின்றனர். 2002-ம் ஆண்டில் இருந்தே, இங்கு மாணவர்கள் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கின்றனர். 

* ரயில் நிலையம் அருகில் உள்ள மலைக்கிராமங்களில் போதிய மின் விளக்கு வசதி இல்லாத நிலை நீடிக்கிறது. அதனால், தாங்கள் படிப்பதற்கு ஏற்ற இடமாக, இளைஞர்கள் இந்த ரயில் நிலையத்தை தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு குழுவாக அமர்ந்து படிப்பதால், போட்டித் தேர்வை எளிதில் எதிர்கொள்ள முடிவதாகவும், பட்டதாரி இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
Tags:    

மேலும் செய்திகள்