"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவோம்" - பினராயி விஜயன்

சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றப்போவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-16 07:04 GMT
சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தடை கோரி மனு தாக்கல் செய்யுமாறு கேரள அரசை அய்யப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கேரளாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசு நிறைவேற்றும் எனவும் எந்த தடை மனுவையும் கேரள அரசு தாக்கல் செய்யாது எனவும் தெரிவித்தார். இந்த பிரச்சினையில், இந்து மத தலைவர்களுடன், தேவசம் போர்டு முதலில் கலந்து ஆலோசிக்கட்டும் எனவும் பாஜக தலைவர்கள் பிரச்சினை ஏற்படுத்தாமல் இருந்தால் சுமூக தீர்வை எட்டலாம் எனவும் பினரயி விஜயன் கூறினார். சபரிமலை செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் வசதிகள் செய்து தரப்படும் எனவும் யாரேனும் சட்டத்தை கையில் எடுக்க நினைத்தால், அதை அனுமதிக்க முடியாது எனவும் பினரயி விஜயன் கூறினார்.  



Tags:    

மேலும் செய்திகள்