சிம்புவின் "ஈஸ்வரன்" திரைப்பட இசை வெளியீட்டு விழா - 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட "ஈஸ்வரன்" திரைப்படம்

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படமும், அதன், இசை வெளியீட்டு விழாவும், சினிமா வாழ்க்கையில் அவர் மீதான பார்வையை மாற்றியிருக்கிறது

Update: 2021-01-03 10:54 GMT
நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர் என தமிழ் திரை உலகில், பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர் நடிகர் சிம்பு....

ஐயம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்... என்று 80-களில் குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றிய அவர், கடந்த 2002-ஆம் ஆண்டு, காதல் அழிவதில்லை என்ற படத்தின்மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.

அறிமுகமான அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே, தம், அலை, கோவில், குத்து, மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம் என்று வெற்றிப் படங்களை பரிசளித்த சிம்பு, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகரானார்.  
Tags:    

மேலும் செய்திகள்