இலவச மின் இணைப்பு வீட்டுக்கு ரூ.28,000 அபராதம் - அதிர்ச்சி அடைந்த மூதாட்டி

Update: 2022-12-04 02:56 GMT

மதுரை உசிலம்பட்டி அருகே இலவச மின் இணைப்பு பெற்ற மூதாட்டி வீட்டுக்கு, 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெருஞ்சியம்மாள் என்பவரின் வீட்டில் ஆய்வு செய்த மின்மதிப்பீட்டு அலுவலர்கள், வீட்டில் ஃப்ரிட்ஜ், வாஷின் மிஷின்களை பயன்படுத்துவதாக கூறி 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நெருஞ்சியம்மாள், தான் அந்த பொருட்களை பயன்படுத்தவே இல்லை என்று, கூறியுள்ளார்.

இதையடுத்து 3 ஆயிரம் ரூபாயாக அபராதம் குறைக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்