காபூலில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதல் - பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிய போது, ஆக்ஸ்ட் 29 அன்று அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஏழு சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2021-10-16 10:40 GMT
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிய போது, ஆக்ஸ்ட் 29 அன்று அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஏழு சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர். ஐ.எஸ். பயங்கவரவாதி என்று கருதப்பட்ட நபர் பயணம் செய்த வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இவர்கள் உயிரிழந்தனர். ஆனால் இவர்கள் அனைவரும் அப்பாவிகள்  என்றும், தவறுதலாக இவர்கள் மீது தாக்குதல் நடதப்பட்டு விட்டதாகவும் அமெரிக்கா பின்னர் அறிவித்தது. இந்நிலையில், கொல்லபட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு அளிக்க அமெரிக்க அரசு முன் வந்துள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அமெரிக்காவிற்கு புலம் பெயர விரும்பினால், அவர்களுக்கு புகழிடம் அளிக்கவும் தயாராக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரகம் அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்