ஜோ பைடன் - பிரதமர் மோடி சந்திப்பு : இரு தரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை

மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார்.

Update: 2021-09-24 12:23 GMT
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற பின் முதல் முறையாக அவரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இதற்கு முன்பு 2014இல், ஒபாமா அரசில், துணை அதிபராக ஜோ பைடன் பணியாற்றிய போது பிரதமர் மோடி அவரை சந்தித்தார். இந்த ஆண்டில் பல முறை தொலைபேசி மூலம் இருவரும் உரையாடியுள்ளனர். இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் விருந்தளிக்கிறார். அதன் பின்னர் இருவரும், இந்திய அமெரிக்க உறவுகள் பற்றி விவாதிக்க உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளார் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Harsh Vardhan Shringla) கூறியிருந்தார். இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரங்களில் கூட்டு முயற்சிகளை பலப்படுத்துதல், தூய்மை எரிசக்தித் துறையில் கூட்டு முயற்சிகள், புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய ஆராய்ச்சிகள், தொழில்த்துறை இணைப்புகள் பற்றி விரிவாக விவாதிக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து குவாட் நாடுகளின் தலைவர்களுடன் நடக்கும் உச்சி மாநாட்டில் இருவரும் கலந்து கொள்ள உள்ளனர். அதில் ஆப்கானிஸ்தான் நிலவரம், ஆசிய பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர் கொள்ளுதல், சர்வதேச பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விசியங்கள் விவாதிக்கப்பட உள்ளன.


Tags:    

மேலும் செய்திகள்