வெனிஸ் நகரில் குவியும் சுற்றுலா பயணிகள்

இத்தாலியின் வெனிஸ் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால், அதை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்

Update: 2021-09-08 16:42 GMT
இத்தாலியின் வெனிஸ் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால், அதை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

உலகப் புகழ் பெற்று சுற்றுலா நகரான இத்தாலியின் வெனிஸ் நகரம் ஒரு மிதக்கும் நகரம். அங்கு தெருக்களுக்கு பதிலாக கால்வாய்கள் தான் உள்ளன. கார்களுக்கு பதிலாக, கோன்டலா எனப்படும் அழகிய படகுகள் மூலம் நகருக்குள் மக்கள் பயணம் செய்கின்றனர்.

கொரோனா தொற்றுதல் குறைந்த பின், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், வெனிஸ் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

கடந்த ஆண்டு, கொரோனா தொற்றுதலினால், காற்று வாங்கிக் கொண்டிருந்த வெனிஸ் நகரம், இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் மித மிஞ்சிய வரவினால் திணறிக் கொண்டிருக்கிறது.

நகர் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 486 சி.சி.டி.வி கேமிராக்கள், ஆப்டிக்கல் சென்சர்கள் மற்றும் கைபேசி சிம் கார்டுகள் மூலம் காவல்த் துறையினர், சுற்றுலா பயணிகளின் நடமாட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

உள்ளூர்வாசிகள் யார், சுற்றுலா பயணிகள் யார் என்பதையும், இவர்களில் இத்தாலியார்கள் யார் என்பதையும் துல்லியமாக கண்டறிய முடிவதாக வெனிஸ் மேயர் லூய்கி புருக்னரோ கூறுகிறார். 

கால்வாய்களில் படகுகள் சரியான வேகத்தில் செல்கின்றவா என்பதும் கண்காணிக்கப்படுகிறது.

இனி வெனிஸ் நகருக்குள் நுழைய, ஒரு செயலி மூலம் முன் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது. 

இதற்கு 3 முதல் 10 யூரோ வரை கட்டணம்
பருவநிலைக்கு தகுந்தாற்போல வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஒரு உச்ச வரம்பு விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்