செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு - நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக ஆக்சிஜன் தயாரித்து இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2021-04-22 07:16 GMT
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக ஆக்சிஜன் தயாரித்து இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி உள்ள பெர்செவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாயின் மேற்பரப்பில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் மிக மிக குறைந்த அளவு ஆக்சிஜனே உள்ள நிலையில், அங்குள்ள கார்பன்-டை-ஆக்சைடை பிரித்தெடுத்து, ஆக்சிஜன் தயாரித்து இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். பெர்செவரன்ஸ் ரோவர் கலத்துடன், பொருத்தப்பட்டுள்ள மோக்சி என்ற கருவி, 5 கிராம் எடையளவில் ஆக்சிஜனை தயாரித்து இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்