உலகின் கடுமையான ஊரடங்கு தெற்கு ஆஸ்திரேலியாவில் அமல் : இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் நடக்குமா?

உலகின் மிக கடுமையான ஊரடங்கு தெற்கு ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2020-11-20 06:36 GMT
கொரோனா பரவல் எதிரொலி காரணமாக தெற்கு ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு விதிமுறைகளில் கடும் கெடுபிடி காட்டப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக அடிலெய்ட் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிவேகம் கண்டு வருகிறது. இதையடுத்து உலகின் மிக கடுமையான ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பள்ளிகள், பூங்காக்களில் உடற்பயிற்சி, பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது, திருமணம், இறுதி ஊர்வலம் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியில் சென்று அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் அடிலெய்ட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடன் முதலாவது டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் ஆட்டம் குறித்த அச்சம் கிளம்பி உள்ளது.   


Tags:    

மேலும் செய்திகள்