அமெரிக்காவின் வயதான அதிபராக பதவியேற்கும் பைடன்

அமெரிக்க அதிபர் பதவியை பிடித்துள்ள ஜோ பைடனின் 50 ஆண்டுகால அரசியல் பயண அனுபவத்தை பார்க்கலாம்.

Update: 2020-11-08 05:40 GMT
1942-ல் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்த ஜோ பைடன், சட்டப்படிப்பை படித்துவிட்டு அங்கு வழக்கறிஞராக பணியாற்றியவர். 

அரசியல் மீது ஆர்வம் கொண்ட அவர் 1970-ல் அரசியலில் ஜனநாயக கட்சியின் தன்னை இணைத்துக்கொண்டார். முதல்முறையாக 73-ல் அமெரிக்க செனட் சபை உறுப்பினரானார். (ஒவ்வொரு நிகழ்வுகளையும் கவனமாக உற்று நோக்குதல், தெளிவான பதில்களை வழங்குதல் என ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக விளங்குகிறார். )

2008, 2012 அதிபர் தேர்தலின் போது ஜனநாயக கட்சியின் வேட்பாளாரை தேர்வு செய்யும் தேர்தலில் ஒபாமாவிடம் தோல்வியை தழுவினார். இரண்டு முறையும் அதிபரான ஒபாமா, ஜோ பைடனை தன்னுடைய துணை அதிபராக பணியில் இணைத்துக் கொண்டார்.அமெரிக்க அரசு நிர்வாகத்தில் ஒபாமா அரசுக்கு பக்கபலமாக நின்று, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்களை சிறப்பாக கையாண்டார்.

போதைப்பொருள் கொள்கை, குடிமக்கள் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள், வன்முறை தடுப்பு சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டங்களை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றியவர், பைடன்
பொருளாதார ரீதியாக அமெரிக்காவின் வளர்ச்சியை மையமாக கொண்டு வரி நிவாரணச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வரவும் ஒபாமாவிற்கு பக்கபலமாக நின்றவர். 

'ஒபாமா-கேர்' மருத்துவக் காப்பீட்டு மானியத் திட்டம் கொண்டு வரப்பட்டதில் மிக அதிகமான மகிழ்ச்சியை கொண்டிருந்தார். அதற்கான காரணமும் உள்ளது. 1972-ல் நடைபெற்ற கார் விபத்தில் அவருடைய முதல் மனைவியையும், மகளையும் இழந்துவிட்டார். 2015-ம் ஆண்டு ஜோ பைடனின் மகன் ஒருவர் மூளை புற்றுநோயில் உயிரிழந்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்த பைடன் மக்கள் பயனடையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் அதிதீவிரமாக கவனம் செலுத்தியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்