உக்ரைனுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய உதவி செய்த அமெரிக்கா - "போரில் திருப்பம் ஏற்படுமா..?"

Update: 2024-04-27 13:01 GMT

உக்ரைனுக்கு 49 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் புதிய ஆயுதங்களை வழங்க உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்... உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் புதின் வெற்றி பெற்றால், விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்றும், ஐரோப்பா தன் வாழ்நாளில் கண்டிராத பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்த ஆஸ்டின், தற்போது அளிக்கப்படும் உதவித் தொகுப்பு அமெரிக்காவிடம் இருந்து உக்ரைனுக்கு இதுவரை கிடைத்த உதவிகளிலேயே மிகப்பெரியது என்று குறிப்பிட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்