"அடிச்சான் பாரு Appointment ஆர்டர்.." இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா சொன்ன ஹாப்பி நியூஸ்

Update: 2024-05-08 16:33 GMT

வரும் கல்வி ஆண்டில் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 8,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் ஒலெக் நிகோலாயெவிச் அவ்தீவ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வரும் மே 11, 12 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், வரும் 17-ஆம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் ரஷ்ய கல்வி கண்காட்சி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்