அமெரிக்காவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி... "என்னால் மூச்சு விட முடியவில்லை..." தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-04-27 09:40 GMT

அமெரிக்காவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி... "என்னால் மூச்சு விட முடியவில்லை..." தீயாய் பரவும் வீடியோ

2020ல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது...

கைது செய்து முடக்கிய போது "என்னால் சுவாசிக்க முடியவில்லை" என்று போலீசாரிடம் கூறியவாரே ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் மரணமடைந்தார்... கான்டன் நகர காவல்துறையினர் இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.. அதில், ஏப்ரல் 18 அன்று மின் கம்பத்தில் கார் ஒன்று மோதிய நிலையில், வாகன ஓட்டுநர் அருகிலுள்ள உணவகத்திற்குள் ஓடி விட்டதாக விபத்தைக் கண்டவர் கூறியுள்ளார்.. இதையடுத்து அங்கிருந்த பாரில் விபத்து தொடர்பாக சந்தேகத்திற்கிடமான நபராகக் கருதப்பட்ட 53 வயது ஃபிராங்க் டைசனை அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது வாக்குவாதம் எழுந்துள்ளது... "என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர்... ஷெரிஃபை அழையுங்கள்" என்று ஃபிராங்க் டைசன் பல முறை கூச்சலிட்டார். ஆனால் அதிகாரிகள் டைசனை தரையில் படுக்க வைத்து கைவிலங்கு பூட்டினர்... அதிகாரிகளில் ஒருவர் டைசனின் முதுகில் தனது முழங்காலை கழுத்தின் அருகே வைத்து அழுத்தியுள்ளார்.. "என்னால் மூச்சு விட முடியவில்லை..." என்று திரும்பத் திரும்ப டைசன் கூறிய நிலையில், சிறிது நேரத்தில் அவர் பேச்சு மூச்சில்லாமல் மூர்ச்சையுற்றார்.. அதன் பின்பு அதிகாரிகள் முதலுதவி செய்து அவரை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்ற நிலையில், டைசன் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.. இறப்புக்கான அதிகாரப்பூர்வ காரணம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் விடுப்பில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்