"13வது திருத்த அரசியலமைப்பே நடைமுறையில் உள்ளது" - இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தகவல்

இந்திய, இலங்கை மீனவ பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் மோடி, சரியாக பதில் அளிக்கவில்லை என, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-30 03:54 GMT
கொழும்புவில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமாக பேசிய இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொலி கலந்துரையாடலின் போது, இந்திய பிரதமர் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துமாறு வலியுறுத்தியதாக வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் இதனைக் குறிப்பிட்டார்.இந்திய - இலங்கை மீனப் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெளிவான பதிலை வழங்கவில்லை என பிரதமர் ராஜபக்சே கூறியதாக, டக்ளஸ் தேவானாந்தா கூறினார். அத்துடன், தமிழக முதலமைச்சரிடம் கலந்துரையாடல் நடத்தி, உரிய பதில் தர ராஜபக்சே வலியுறுத்தியதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.  

நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்லும் அற்புத காட்சி - சமூக வலை தளங்களில் பரவி வரும் வீடியோ

இலங்கையில் மலைக்குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்லும் அற்புத காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 
நுவரெலியா பகுதியில் அமைந்துள்ள சிவனொளி பாதமலை அருகே இயற்கைக்கு மாறாக அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவனொளி பாதமலைக்கு அருகில் உள்ள மலைக் குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சியானது, புவியீர்ப்பு விசைக்கு மாறாக, மேல்நோக்கி பாய்கிறது. மலையின் கீழ்ப்பகுதியில் இருந்து காற்று அதிக வேகத்துடன் மேலெழும்புவதால், நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்