வெடி விபத்துக்கு பொறுப்பேற்று - லெபனான் பிரதமர் ராஜினாமா

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2020-08-11 03:27 GMT
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ராஜினாமா செய்துள்ளார். பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள ரசாயன கிடங்கில், கடந்த 4ம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், சுமார் 6 ஆயிரம் பேர் காயமடைந்தனர். இந்த பயங்கர விபத்தால் 6 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வெடி விபத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என கூறி நாட்டின் பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் டியாப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்