இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்

இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் இன்று பதவி ஏற்கிறார்.

Update: 2020-08-09 03:09 GMT
225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில், பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்த கட்சிக்கு 145 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்தன. இதைத்தொடர்ந்து மீண்டும் இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழா கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் நடக்கிறது. புதிய நாடாளுமன்றம் வருகிற 20-ந் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

"19-வது திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பாக முடிவு" - அதிபர், புதிய அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கோரிக்கை

இலங்கையில் அரசியலமைப்பு சட்டத்தில் 19-வது திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பாக அதிபர் கோத்தாபய ராஜபக்சவும், புதிய அமைச்சரவையும் இணைந்து முடிவெடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. அதன் சார்பில்  கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு முதலிடத்தைப் பிடித்த அட்மிரல் சரத் வீரசேகர செய்தியாளர்களை சந்தித்த போது இந்த கோரிக்கையை முன்வைத்தார். 19ஆவது திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மறைமுகமாக கூறிய அவர், சுயாதீனம் என்கிற ஆணை குழுக்கள் அரசு அதிகாரிகளின் அதிகாரங்களை பறித்ததாக குற்றம்சாட்டினார். 

"ஐ.நா. உட்பட எந்தவொரு அழுத்தங்களுக்கும் பணிய மாட்டோம்"

இலங்கை தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்துள்ளதால், 19 வது திருத்தச் சட்டத்தை செயல்படுத்த உள்ள தடைகள் களையப்படும் என  பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.  கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்றத்தில் வலுவான  எதிர்க்கட்சி இல்லை என்பதால், நாடாளுமன்ற குழுக்கள்  பலப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ஐ.நா. உட்பட எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும், அமைப்புக்கும் இலங்கை அரசாங்கம் அடிப்பணிந்து செயல்படாது என்றும் என்றும் பீரிஸ் தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சி 22 தேர்தல் மாவட்டங்களில் 19 மாவட்டங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்