வீட்டையே திரையரங்கமாக மாற்றிய காதலன் - காதலிக்காக ஊரடங்கு நேரத்தில் சிறப்பு ஏற்பாடு...

காதலிக்காக ஒரு இளைஞர் வீட்டையே சினிமா தியேட்டராக மாற்றிய காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2020-05-21 08:52 GMT
என்னோடு சினிமா பார்க்க தியேட்டருக்கு வருகிறாயா என்று இந்தப் பெண்ணிடம் கேட்கிறார் இவரின் காதலர். ஊரடங்கின் போது தியேட்டரா உளறாதே என்கிறார் காதலி.. ஆனால், காதலிக்காக தன் வீட்டையே இவர் தியேட்டராக மாற்றியிருப்பார் என நிச்சயம் இவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
இதற்கென ஒரு டிக்கெட், அதை சரிபார்க்க ஒரு நபர், பாப்கான் விற்க ஒரு கடை... இதெல்லாம் போதாதென்று ஆடிட்டோரியம் ஒன், டூ என போர்டுகள் வேறு... அப்படியே தியேட்டரின் உணர்வு கொஞ்சம் கூட குறையாமல் தன் வீட்டு டி.வியிலேயே படம் போட்டு காதலியோடு அமர்ந்து அதைப் பார்த்திருக்கிறார் இந்த ஸ்மார்ட் காதலர். ஊரடங்கு முடிந்த பிறகும் கூட இதே ஐடியாப்படி படம் பார்க்கலாமே என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சில கஞ்சத்தனமான காதலர்கள்.
Tags:    

மேலும் செய்திகள்