வெள்ளை மாளிகைக்கு வந்த கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக அமெரிக்காவில் குளிர்கால அரசு விடுமுறை ஆரம்பமாகியுள்ளது.

Update: 2018-11-20 05:20 GMT
வெள்ளை மாளிகையில் ஆண்டுதோறும் இடம்பெறும் கிறிஸ்துமஸ் மரம் இந்த ஆண்டு வடக்கு கரோலினா மாகாணத்தில் இருந்து  கொண்டுவரப்பட்டுள்ளது. சுமார் 19 புள்ளி 5 அடி உயரம் கொண்ட இந்த மரத்தை அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா வரவேற்றனர். மாளிகையில் உள்ள புளூ அறையில் இந்த மரம் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து புத்தாண்டு வரை பல்வேறு விருந்து நிகழ்ச்சிகள் அங்கு அரங்கேறவுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்