முதல்வர் 5 நாள் கோடை விசிட் | CM Stalin | Kodaikkanal | Tour

Update: 2024-04-29 14:36 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின், மதுரை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்றடைந்தார்

மக்களவை தேர்தலையொட்டி, 40 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், ஒய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றுள்ளார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்றடைந்தார். பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் தனியார் விடுதியில் குடும்பத்தினருடன் தங்கி மே 3-ம் தேதி வரை ஓய்வெடுக்கிறார். மேலும், கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை அவர் கண்டு ரசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பின்னர், மே 4-ம் தேதி அவர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரின் வருகையொட்டி, கொடைக்கானல் பகுதியில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்