இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கைகலப்பு : கைகலப்பில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கு காயம்

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசியபோது கடும் மோதல் ஏற்பட்டது.

Update: 2018-11-15 11:33 GMT
* இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி, நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் பதவியிழந்த பிறகு, பிரதமர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது சட்ட விரோதம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜபக்சே பேச முற்பட்டால், எதிர்ப்பு ஏற்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடியதும் பிரதமர் என்ற வகையில் மகிந்த ராஜபக்சே பேச எழுந்தார். 

* இதற்கு ரணில் விக்ரமசிங்கே தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பு எம்பிக்களுக்கு இடையே கடும் மோதல் உருவானது. இதில் ராஜபக்சே தரப்பு எம்.பி. ஒருவர் காயமடைந்தார். இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், சபாநாயகர் இருக்கையை ராஜபக்சே ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து, சபாநாயகர் ஜெயசூர்யா, நாடாளுமன்றத்தில் இருந்து அவசரமாக வெளியேறினார். 
Tags:    

மேலும் செய்திகள்