நிச்சயமான பெண்ணுக்கு அரசு வேலை... ஆசையாய் கையில் ஆர்டரோடு வந்தவருக்கு பேரிடி

Update: 2024-05-26 05:53 GMT

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூரை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர், தனக்கு நிச்சயமான பெண்ணுக்கு அரசு வேலை கிடைக்க மோகன் என்பவரை அணுகியுள்ளார். அவரிடம் 9 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட மோகன், பணி நியமன ஆணையை கொடுத்துள்ளார். ஆனால், அது போலி என தெரிய வந்த‌தை அடுத்து, சென்னை யானை கவுனி காவல் நிலையத்தில் தினேஷ் குமார் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், மற்றொரு நபருக்கு போலி நியமன ஆணை கொடுக்க முயன்ற மோகன் அவரது மனைவி கௌசல்யாவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34 போலி பணி நியமன ஆணைகள், 48 அரசு முத்திரைகள், 8 போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்