வயதானவர்கள் மட்டுமே டார்கெட்... வெளியே செல்லும் போது இப்படி சொல்வார்கள் - உஷாரா இருங்க மக்களே

Update: 2024-05-26 05:38 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போலீஸ் போல் நடித்து முதியவர்களை ஏமாற்றி நகைகளை அபேஸ் செய்த டூப்ளிக்கேட் போலீஸ் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. உடுமலையில் நடந்து சென்ற 82 வயதான மீனா என்ற மூதாட்டியிடம், போலீஸ் என அறிமுகமாகிய சிலர், நகைகளை அணிந்து செல்வது பாதுகாப்பில்லை எனக்கூறி வாங்கியுள்ளனர். பின்னர், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி, நகைகளுக்குப் பதில் கற்களை பையில் போட்டுவிட்டு, திருடிச் சென்றனர். புகார் அடிப்படையில் பாலப்பம்பட்டி பைபாசில் வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், 7 பேரை பிடித்து, 9 சவரன் நகைகள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வயதானவர்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த‌து தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்