எதிர்பாரா நேரத்தில் ரஷ்யா எடுத்த முடிவு... அதிர்ச்சியில் உக்ரைன்

Update: 2024-05-26 06:10 GMT

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் உள்ள மிகப்பெரிய ஹார்டுவேர் சூப்பர் மார்க்கெட் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்து பலத்த சேதமடைந்தன. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உள்ளூர்

அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற போது ஹார்டுவேர் சூப்பர் மார்க்கெட்டில் 200க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில்  ஆழ்ந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்