இந்தோனேசியாவின் சுற்றுலா தீவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான லம்போக்கில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2018-08-19 13:24 GMT
இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான லம்போக்கில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ரிஞ்சானி மலைப்பகுதி அருகே மையம் கொண்ட இந்த நிலநடுக்கம்,6 புள்ளி 3 ரிக்டர் அளவில் பதிவானது.நிலநடுக்கத்தை தொடர்ந்து,விமான நிலையம்,மருத்துவமனைகளில் இருந்து மக்கள் வேகமாக வெளியேறினர்.ஏற்கனவே,இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு 430 பேர் பலியான நிலையில்,மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால்  மக்கள் பீதியடைந்தனர்.எனினும், இந்த நிலநடுக்கத்தால் அதிக சேதம் எதுவும் ஏற்படவில்லை.
Tags:    

மேலும் செய்திகள்