"மஞ்சும்மல் பாய்ஸ்" தயாரிப்பாளர்கள் மீதான வழக்கு - கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-05-05 07:00 GMT

"மஞ்சும்மல் பாய்ஸ்" தயாரிப்பாளர்கள் மீதான வழக்கு - கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்களை கைது செய்ய கேரள உயர்நீதின்றம் தடை விதித்துள்ளது...

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'மஞ்சும்மல் பாய்ஸ்' மலையாள திரையுலகில் 200 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையையும் படைத்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரரான ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக தான் 7 கோடியை முதலீடு செய்திருந்ததாகவும், ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்போது வரை தனக்கு லாபத்தில் ஒரு ரூபாய் கூட பணம் அளிக்கவில்லை எனவும், முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டதுடன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் 3 பேர் மீதும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். முன் ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம், 3 பேரையும் இம்மாதம் 22ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்