சுந்தர் சி, விஷால் ஆதி கூட்டணியின் "புருஷன்" - டைட்டில் அறிவிப்பு
இயக்குநர் சுந்தர்.சி பிறந்த நாள முன்னிட்டு, "புருஷன்" படத்தோட டைட்டில் ப்ரோமோவ படக்குழு ரிலீஸ் பண்ணீருக்காங்க.இதே சுந்தர்.சி, நடிகர் விஷால், மற்றும் ஹிப்ஹாப் ஆதி கூட்டணில, 2015ம் ஆண்டு வெளியான "ஆம்பள" படத்தோட புரமோசன் மறக்க முடியாதது. 7 வருஷம் கழிச்சு இவங்க கூட்டணில ஆக்ஷன், காமெடி பின்னணில உருவாகிட்டு வர "புருஷன்" படத்தோட ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள வெகுவா கவர்ந்துருக்கு. இதுஒருபக்கம்னா, சுந்தர் சி பிறந்தநாள் அதுவுமா பட டைட்டிலோட "happy birthday purushan"ன்னு நடிகை குஷ்பு வாழ்த்து சொல்லிருக்காங்க.