"நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுக" - சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-08 13:18 GMT
தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் உள்ள நீர் நிலையில் புதிய காவல்நிலையம் கட்ட தடை விதிக்கக்கோரி அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டதாக  நீதிபதிகள் அதிருப்தி  தெரிவித்தனர். நீர் நிலைகளையும், வனப்பகுதிகளையும் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் அழித்துவிடக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

மேலும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தமிழக தலைமை செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், சென்னையில் பெரும்பான்மையான நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளதாகவும், நீர் நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்