ஐ.டி. விதி 2021- மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரான வழக்கில், மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-14 17:02 GMT
பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ஐ கொண்டுவந்தது. அது, டிஜிட்டல் தளத்தில் செய்தி வெளியிடுவோரின் விளக்கம் கேட்காமல் முடக்க, தகவல் தொழில்நுட்ப துறை செயலருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது என்றும் தன்னிச்சையான வதியை செல்லாது என அறிவிக்குமாறும் மனுவில் கூறியிருந்தனர். தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்ட போது, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில், எதிர் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அவற்றை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, மனு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. வாதத்தை கேட்ட நீதிபதிகள், வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதிக்காததால், மனுவுக்கு 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்