மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு முனையமாக அறிவிக்க கோரிக்கை - விமான போக்குவரத்து துறை பதிலளிக்க உத்தரவு

பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து, தகவமைப்புகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில், விமான போக்குவரத்து துறை பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-27 02:01 GMT
பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து, தகவமைப்புகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில், விமான போக்குவரத்து துறை பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்தியா அளவில்  மதுரை 44வது இடத்தில் வளர்ச்சி பெற்ற நகரமாக வளர்ந்து வருவதாகவும், பன்னாட்டு விமான நிலையமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். மீனாட்சி அம்மன் கோயில், உயர் நீதிமன்ற கிளை, குமரி, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கோரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, மத்திய விமான போக்குவரத்து துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்