தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை : நாளை வெளியிடும் முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை, முதலமைச்சர் பழனிசாமி நாளை வெளியிடுகிறார்.

Update: 2021-02-15 06:59 GMT
தமிழக அரசின்  புதிய தொழில் கொள்கையை,  முதலமைச்சர் பழனிசாமி நாளை வெளியிடுகிறார். அத்துடன், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையும் வெளியிடப்படுகிறது. இவ்விரண்டு தொழில் கொள்கையும் நாளை காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் வெளியிடவுள்ளார்.  பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னிலையில் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இதன் மூலம்,  நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சத்து 25  ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் 8 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை முதலமைச்சர் நாளை  துவக்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து, 4 சிப்காட் மற்றும் 6 டிட்கோ தொழில் பேட்டைகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். மணப்பாறை, ஒரகடம், கும்மிடிப்பூண்டி, தர்மபுரி, சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. 


Tags:    

மேலும் செய்திகள்