முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

Update: 2021-01-27 10:34 GMT
சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ல் சொத்து வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளியாக சசிகலா அறிவிக்கப்பட்டார். அவருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் அவர் சரணடைந்தார்.  இந்நிலையில், சசிகலாவின் தண்டனைக் காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை விடுதலை செய்யும் பணிகளை அதிகாரிகள் காலையிலேயே மேற்கொண்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சசிகலா சிகிச்சை பெற்று வரும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு கா​லை 10.30 மணிக்கு, பரப்பன அக்ரஹார சிறைத்துறை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி தலைமையில் வந்த அதிகாரிகள், விடுதலை தொடர்பான ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர். பின்னர் இந்த ஆவணங்களின் நகல்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் சிறைத்துறை அதிகாரிகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து சசிகலா அதிகாரப்பூர்வமாக விடுதலையானார்.
Tags:    

மேலும் செய்திகள்