தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு - போலீசார் தீவிர வாகன சோதனை

தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமையான இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

Update: 2020-08-09 05:53 GMT
இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும், போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 193 இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நகரின் பிரதான சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர்த்து, வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மீறி வெளியே சென்றால், வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையில் வெறிச்சோடிய சாலைகள்

முழு ஊரடங்கையொட்டி மதுரையில் உள்ள முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு  எண்ணிக்கை 285ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


முழு ஊரடங்கு - போலீசார் தீவிர சோதனை

நெல்லை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால், நகரின் முக்கிய பகுதிகளான நெல்லை டவுண், வண்ணாரபேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன.


Tags:    

மேலும் செய்திகள்