7 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம் - சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பபட்டு கொல்லப்பட்ட சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-03 08:43 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார். அவரது உடல்   காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ,தமிழக முதல்வரின் நிவாரண நிதியாக ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வன்கொடுமை தடுப்பு சட்ட சீர் உதவித் தொகையான 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையையும் அவரது குடும்பத்தினரிடம் அவர் வழங்கினர். இதனிடையே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்நது சிறுமியின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்