ராசிபுரத்தில் மாவு பூச்சி தாக்குதல் - மரவள்ளி பயிர் சேதம்

ராசிபுரம் அருகே மாவு பூச்சி தாக்குதல் காரணமாக சுமார் ஆயிரம் ஹெக்டேர் மரவள்ளி பயிர் சேதம் அடைந்தது.

Update: 2020-06-02 15:11 GMT
ராசிபுரம் அருகே மாவு பூச்சி தாக்குதல் காரணமாக சுமார் ஆயிரம் ஹெக்டேர்  மரவள்ளி பயிர் சேதம் அடைந்தது. வெள்ளாளப்பட்டி,  அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பலகிராமங்களில் ஆயிரம் ஹெக்டேருக்கே மேல் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்ப்பட்டுள்ளது.. இந்நிலையில் மாவு பூச்சிதாக்குதல் மரவள்ளி பயிர்கள் சேதமடைந்தது. இதனை வேளாண்மைதுறை ஆணையர் ககன்தீப்சிங்பேடி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம பேசிய அவர், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வெட்டுக்கிளி பரவல் கிழக்கு நோக்கி இருப்பதால் தெற்கே உள்ள தமிழகத்திற்கு வர வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்