அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா தொற்று - அச்சமடைய தேவையில்லை என மீண்டவர்கள் நம்பிக்கை

கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சிகிச்சை பெற்று மீண்டவர்கள் தரும் தகவல்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது

Update: 2020-04-27 13:58 GMT
கொரோனா தொற்று ஏற்பட்ட  90 சதவீதம் பேருக்கு நோய் தொற்றியதிலிருந்து அவர்கள் குணமாகும் வரை சிறிய அறிகுறி கூட இருப்பதில்லை என கூறப்படுகிறது. சிலருக்கு எந்தவித மருத்துவமும் இல்லாமல் தொற்று தானாகவே சரி ஆகிவிடுகிறது.

5 சதவீதம் பேருக்கு லேசான காய்ச்சல், தொண்டை வலி, ஜலதோஷம், மற்றும் வறட்டு இருமல் இருக்கிறது. அவர்களும் ஒருநாள் அல்லது 2 நாட்களில் தானாகவே சரி ஆகின்றனர்.மீதமுள்ள 5 சதவீதத்தினருக்கு மட்டுமே சுவாச பிரச்சினை ஏற்படுவதாகவும், அவர்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே சுவாச கருவிகள் வரை தேவைப்படும் நிலை ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.
  
சுவாச கருவிகள் உதவியுடன் இருக்கும்3 சதவீதத்தினரில்,  2 சதவீதம் பேர் மட்டுமே மரணம் வரை செல்வதாகவும் முடிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி மரணிப்பவர்களும், ஏற்கெனவே  நுரையீரல் பிரச்சினை, இதய பிரச்சினை உள்ளவர்கள் என்பதால், உடல்செயலிழப்பு ஏற்பட்டு மரணிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் பல்வேறு தகவல்கள் அடிப்படையில் தெரிய வந்துள்ள இந்த விவரங்கள் நம்பிக்கை அளிப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்