புழல் சிறையில் நடப்பது என்ன? `இது மிக தீவிரமானது' - ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு

Update: 2024-05-04 10:05 GMT

சென்னை புழல் சிறையில் எரிவாயு சிலிண்டர் முறைகேடு குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு செPன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புழல் சிறை துணை ஜெயிலர் சரண்யா என்பவரை பணியில் இருந்து விடுவித்து சிறைத்துறை டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து சரண்யா தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிறையில் எரிவாயு சிலிண்டர்கள் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த முறைகேடு குறித்து கோவை சிறை டிஐஜி விசாரணை நடத்தி வருவதாகவும், சரண்யா பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரண்யா தரப்பில், சிலிண்டர் முறையீடு செய்பவர்களுக்கு இடையூறாக இருந்ததால் தனக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறையில் முறைகேடு நடந்துள்ளது மிகவும் தீவிரமானது எனவும், கோவை சிறை டிஐஜி தனது விசாரணையை முடித்து அதன் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். சிறைத்துறையினர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் புலன் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, சரண்யாவை பணியிலிருந்து விடுவித்து பிறப்பித்த உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்